அனுமதி பெறவில்லை..? சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு... கமலுக்கு பலத்த பாதுகாப்பு.!!

Jun 20, 2023 - 06:17
 0  0
அனுமதி பெறவில்லை..? சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு... கமலுக்கு பலத்த பாதுகாப்பு.!!

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 90 % முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், போலீஸ் வேடங்கள் போட்டிருக்கும் துணை நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், விமான நிலைய காவல் நிலையத்தில் இந்தியன் 2 படக்குழு அனுமதி பெறவில்லை என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, விமான நிலைய  நிர்வாகம் மூலம்  காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டு சரியான அனுமதியுடன் நடைபெற்று வருவதாகவும்,விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஜிஎஸ்டி வரியுடன் ரூ.1.24 கோடி செலுத்தி அனுமதி பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அங்கு கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தபட்டுள்ளது. மேலும், இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow