வேங்கைவயல் விவகாரம் – இதுவரை 158 பேரிடம் சிபிசிஐடி விசாரணை!

டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் நீதிமன்ற உத்தரவு படி அடுத்தகட்ட நடவடிக்கை என சிபிசிஐடி தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இதுவரை 158 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் 156 நாட்களில் 7 காவலர்கள் உள்பட 158 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், டிஎன்ஏ சோதனைக்கு வராத 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்புவது பற்றி நீதிமன்றம் ஆணைப்படி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிஎன்ஏ சோதனை தொடர்பாக 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளதால் கோர்ட் உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்த கூடிய குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.