நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு...தலா 1 லட்ச ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!!

Apr 16, 2023 - 09:15
 0  0

திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நேற்று, திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் கிராமம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றபோது இனியவன் (வயது 12) , சந்துரு (வயது 12) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பகுதியில் உள்ள எம்.பள்ளத்தூர் ஏரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த செல்வி (வயது 11) புவனா (வயது 11) மற்றும் வினோத் (வயது 7) பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் " திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன்  அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow