தங்கம் விலையில் மாற்றம்..! சவரன் ரூ.32 குறைந்தது..!

Apr 13, 2023 - 05:36
 0  1

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று சிறிதளவு குறைந்துள்ளது.

தங்கம் விலை: 

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,676-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.32 குறைந்து  ஒரு சவரன் ரூ.45,408-க்கு விற்பனையாகிறது.

ஆனால், நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனை. அதைப்போல, கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 5,680 ரூபாய் ஆகவும், விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை :

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ரூ.40 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.81.80-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.81,800-க்கு விற்பனையாகிறது.

நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 100 காசுகள் அதிகரித்து ரூ.81.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400 எனவும் விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow