காவிரி நதிநீர் பிரச்சனை..! கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்.!

Aug 23, 2023 - 06:24
 0  1
காவிரி நதிநீர் பிரச்சனை..! கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்.!

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் புதிய அமிர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow