மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Feb 11, 2024 - 15:57
 0  0
மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மாநிலங்களவை தேர்தலுக்கான 14 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது.

பீகாரில் இருந்து சுஷில் குமார் மோடி பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து பீகாரில் இருந்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீம் சிங் மற்றும் தர்மசீலா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுஷில் குமார் மோடி, ”கட்சிக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன், முன்பு போலவே செயல்படுவேன்” என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல்:

பீகார்: மருத்துவர் தர்மசீலா குப்தா மற்றும் மருத்துவர் பீம் சிங்.

சத்தீஸ்கர்: ராஜா தேவேந்திரா பிரதாப் சிங்

ஹரியானா: சுபாஷ் பராலா

கர்நாடகா: நாராயண கிருஷ்ணாஸ பந்தகே

உத்தரபிரதேசம்: சுதன்ஷு திரிவேதி, ஆர்பிஎன் சிங், சவுத்ரி தேஜ்வீர் சிங், சாதனா சிங், அமர்பால் மௌரியா, சங்கீதா பல்வந்த், நவின் ஜெயின்

உத்தரகாண்ட்: மகேந்திரா பட்

மேற்கு வங்காளம்: சாமிக் பட்டாச்சார்யா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow