பிட்புல் உள்ளிட்ட ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

Mar 14, 2024 - 05:16
 0  0
பிட்புல் உள்ளிட்ட ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

Banned Dog: இந்தியாவில் சமீப காலங்களாக மனிதர்களை வீட்டில் வளர்க்கப்படும் சில ஆக்ரோஷமான நாய் இனங்கள் கடித்து உயிரிழப்புக்கு வழியை வகுக்கிறது. இந்நிலையில், பிட்புல், புல்டாக் போன்ற ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி செய்வதற்கும் மற்றும் விற்பனைக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

READ MORE - சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!

மேலும், தடை செய்யப்பட்ட இனங்களுக்கு விற்பனை உரிமம் வழங்குவதை தடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அது மட்டும் இல்லாமல், இந்த இனங்களை வைத்திருப்பவர்களுக்கு, நாய்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும்.

READ MORE - ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு… நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி!

இதுபோன்ற ஆபத்தான நாய்களால் மனித உயிர்கள் பலியாவதை தடுப்பதே இதன் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட முழு பட்டியல்

  1. பிட்புல் டெரியர்
  2. டோசா இனு
  3. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
  4. ஃபிலா பிரேசிலிரோ
  5. டோகோ அர்ஜென்டினோ
  6. அமெரிக்கன் புல்டாக்
  7. போர்போயல்
  8. கங்கல்
  9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
  10. காகசியன் ஷெப்பர்ட் நாய்
  11. தென் ரஷ்ய ஷெப்பர்ட்
  12. டோர்ன்ஜாக்
  13. டோசாலினாக்
  14. அகிடா
  15. மாஸ்டிஃப்
  16. ராட்வீலர்
  17. டெரியர்
  18. ரோடீசியன் ரிட்ஜ்பேக்
  19. ஓநாய் நாய்கள்
  20. கனாரியோ
  21. அக்பாஷ் நாய்
  22. மாஸ்கோ காவலர் நாய்
  23. கேன் கோர்சோ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow