ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு… நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி!

Haryana : ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பாஜக மூத்த தலைவரும் அம்மாநில முதல்வருமான மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் நேற்று கூண்டோடு பதவி விலகினர்.

Read More – பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. ஒருவர் கைது.!

இதையடுத்து ஹரியானாவில் பாஜக எம்ஏஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்றார். அவருக்கு  அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதன்படி, ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்த சூழலில், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த நிலையில், ஹரியானா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது.

Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!

புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதன்பின் பேரவையில் பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி,  நான் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன், என் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை. இன்று எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித் ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அதன்படி, ஹரியானா மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்பேன் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா மாநில சட்டசபையில், பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்கள் உள்ளனர், மேலும் 7 சுயேச்சைகளில் 6 பேரின் ஆதரவையும், ஹரியானா லோகித் கட்சி எம்எல்ஏ கோபால் கண்டாவின் ஆதரவையும் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment