காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!

Cauvery River : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜாக என யார் வந்தாலும் சரி, இங்கு திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது” என்ற நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!

கர்நாடாக அரசு காவேரியில் தண்ணீர் இருக்கும் போதே தமிழகத்திற்கு திறந்து விட யோசிப்பார்கள். தற்போது பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் இனி யார் கேட்டாலும் தண்ணீர் திறந்து விட முடியாது என்ற மனநிலையில் தான் தற்போது உள்ளது.

Read More – வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அண்மையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனை குறிப்பிட்டு, தமிழகத்தில் காங்கிரஸுக்கு நெருக்கமான திமுக ஆட்சி செய்து வருகிறது. அதனால் கர்நாடக அரசு காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது என பாஜக குற்றம் சாட்டியது. ஆனால் இதனை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் முற்றிலும் மறுத்துள்ளார். இங்கு பெங்களூரு மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவே நாங்கள் தண்ணீரை திறந்து விட்டோம் என விளக்கம் அளித்தார்.

Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

அடுத்து, இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதல்வர், தமிழக்த்தில் இருந்து கூட யாரும் தண்ணீர் கேட்கவில்லை. பிறகு எப்படி நாங்கள் தண்ணீர் திறப்போம். தற்போது எங்களிடமே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது தமிழக அரசு கேட்டாலும் சரி, மத்திய அரசு உத்தரவிட்டாலும் சரி நாங்கள் தமிழகத்திற்கு தற்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment