ரம்ஜான் ஸ்பெஷல்: அசத்தலான பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி தெரியுமா..?

ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை. 

பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு.

பொதுவாக இஸ்லாமியர்கள் செய்யும் பிரியாணியில் தனித்துவமான சுவை காணப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் ரம்ஜானை சிறப்பாக கொண்டாடும் வகையில் பாய் வீட்டு பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி – ஒரு கிலோ
  • சிக்கன் – ஒன்றரை கிலோ
  • நெய் – நூறு மில்லி
  • எண்ணெய் – 100 மில்லி
  • பட்டை – இரண்டு கிராம்
  • ஏலக்காய் – ஏழு
  • கிராம்பு – ஆறு
  • வெங்காயம் – 400 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
  • புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • தக்காளி – 400 கிராம்
  • தயிர் – 150 கிராம்
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பால் – 200 மில்லி
  • எலுமிச்சை – ஒன்று

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் அகலமான பாத்திரத்தில் அதில் தண்ணீர் ஊற்றி  கொதிக்க விட வேண்டும்.

பின் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்க வேண்டும். பாத்திரம் சூடான பின், அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடான பின், கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம்  சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.

பின் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கி அதில் பச்சை மிளகாய் தக்காளியை சேர்த்து வேக விட வேண்டும். தயிர் சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து விட வேண்டும்.

பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து அடுப்பின் தீயை குறைத்து வைத்து, சிக்கனை நன்கு வேக விட வேண்டும். பின்பு பிரியாணிக்கு தேவையான  700 மில்லி தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து எலுமிச்சை சாறு சேர்த்து சில வினாடிகள் கொதித்த பின் இறுதியாக பச்சைப்பால் சேர்த்து பாத்திரத்தின் மூடி கலவையை வேக வைக்க வேண்டும்.

அடுப்பில் இருக்கும் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பாதி பதத்திற்கு வேக வைக்க வேண்டும். பின்பு அரிசியை வடிகட்டி கொதித்துக் கொண்டிருக்கும் பிரியாணி கலவையினுள் சேர்க்க வேண்டும்.

அதன் பின் பாத்திரத்தை தட்டால் மூடி அடுப்பை குறைவான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து, அதன் பின்  அப்படியே அணைத்து வைத்துவிட வேண்டும். பின் கனமான பொருளை வைத்து சிறிது நேரம் விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான, மணமான பாய் வீட்டு பிரியாணி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment