இன்று துவங்குகிறது எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்.! 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்.!

இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் துவங்குகிறது. இதில் 2024 தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. 

இன்று பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டமானது பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தும் இருந்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, ஜனதா தளம் கட்சி தலைவர்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி (ஒரு பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெய்ச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி, தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.