அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

Jun 13, 2023 - 06:15
 0  0
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்து பற்றி விவாதிக்க வாய்ப்பு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக மாநில மாநாடு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நிலையில், இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி, அண்ணாமலை கருது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசங்கப்பட உள்ளது. மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow