விஜய் சாருடன் ரோட்டுகடை பிரியாணி.! அடடா… நெகிழும் நெல்சன்.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நெல்சன் திலீப் குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” … Read more

பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்..!

பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பத்திரிகையாளரான ராணா அயூப் கொரோனா நிவாரணத்திற்காக பொதுமக்களிடமிருந்து 2020-21 ஆம் ஆண்டில் அவர் பெற்ற நிதியைப் பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது. இதற்கிடையில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) லுக் அவுட் … Read more

#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார். திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார். சந்திப்பு: நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை: … Read more

விவசாயிகளின் கணக்கில் ரூ.1029.31 கோடி செலுத்திய முதல்வர் பூபேஷ் பாகேல்..!

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் காணொளி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் 20.58 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1029.31 கோடியை மாற்றினார். அதே நேரத்தில், கோதன் நீதி யோஜனா திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர், மகளிர் குழுக்கள் மற்றும் கோதன் குழுக்களுக்கு 13 கோடியே 62 லட்சம் … Read more

#BREAKING: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு. கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% … Read more

அதிரடி…திருமணமாகாத மகள்கள் பெற்றோரிடம் இதனை கேட்க உரிமை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Chhattisgarh:திருமணமாகாத மகள் திருமணச் செலவுகளை பெற்றோரிடம் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்,1956-ன் கீழ் திருமணமாகாத மகள்கள் தங்கள் பெற்றோரிடம் திருமணச் செலவுகளைக் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், “இந்திய சமுதாயத்தில் பொதுவாக திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணத்தின் போதும் பெற்றோர் செலவுகள் செய்ய வேண்டும்” என்றும் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண செலவுகளுக்காக: பிலாய் எஃகு ஆலையில் பணிபுரிந்த பானு ராம்,ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு … Read more

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ரத்து!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்த பின் நகல் வழங்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2011-15ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி … Read more

சற்று நேரத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்திக்கிறார்..!

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் நேரில் சந்திக்கிறார். திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார். நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும், மழை … Read more

கேஜிஎப்- 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!

நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு சென்சார் … Read more

#Breaking:10.5% இட ஒதுக்கீடு – அமைச்சர் துரைமுருகன் அளித்த உறுதி!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி. முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க … Read more