அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு..!

திருத்தணி முருகன் கோவிலுக்கான வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகளை  அமைக்க அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் சேகர்பாபு , தமிழ்நாட்டில் காலியாக உள்ள கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணி கோவிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகளும் விரைவில் பலப்படுத்த நடவடிக்கை … Read more

வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு உடனடியாக புள்ளி விவரங்களை எடுத்து மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும்  ஒதுக்கீடு … Read more

கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை..!

புதிய கோவில்களை துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டது. அதில், விதிகளை மீறி செயல்படும் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

பீஸ்ட் ஆக்‌ஷன் பட்டையக் கிளப்பும்.! நெல்சன் கூறிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் … Read more

கண்டிக்கத்தக்க செயலுக்கு இலாகாவை மாற்றுவது தீர்வாகாது – ஓபிஎஸ்

இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். முதலமைச்சர் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் … Read more

ஓபிஎஸ்- இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து-  நீதிமன்றம் உத்தரவு..!

ஓபிஎஸ் இபிஎஸ்க்கு எதிராக பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி  கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறிய காரணம் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி. எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு  வழக்கு தொடர்ந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து … Read more

இன்று இரவு சென்னை -லக்னோ மோதல்.., முதல் வெற்றி யாருக்கு?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் கின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும் இரு அணிகளின் மிடில் ஆர்டர் மட்டுமே … Read more

#BREAKING: வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி, 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் … Read more

#BREAKING: விருதுநகர் வன்கொடுமை – 3வது நாளாக சிபிசிஐடி விசாரணை!

விருதுநகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3வது நாள் சிபிசிஐடி விசாரணை. விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி போலீசார் 3வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்து சென்று ஹரிஹரன், ஜூனைத்திடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. முன்னதாக … Read more

குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாகவுள்ளது. இதனால் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக 25-கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், அஜித் குமார் கேரளாவில் உள்ள … Read more