#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார்.

திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

சந்திப்பு:

நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார்.

பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை:

இதனைத் தொடர்ந்து,மேகதாது விவகாரம்,நீட் விலக்கு,தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவித்தல்,மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரம்,மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி,ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம்  முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னர்,இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியையும்,3.30-க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:

இதனையடுத்து,இன்று மாலை 4.30க்கு டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் சந்திக்கிறார்.ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் சேர்ந்து சந்திக்கவுள்ள்ளார்.மேலும், ஏப்.1 ஆம் தேதி மாலை 4.30-க்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.