தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்…!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி பயணம்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயரதிகாளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதமும் டெல்லி சென்றிருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உயர்  அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி..!

ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 26-ஆம் சென்னையில் இருந்து டெல்லிசென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்ட – … Read more

இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…!

இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் … Read more

நீட் விலக்கு மசோதா:தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். முதல்வர் விளக்கம்: இதனையடுத்து,ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா,கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி உள்ளது … Read more

#Breaking:ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- என்ன காரணம்?!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.அப்போது,பிரதமர் மோடி,மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்திருந்தார். இந்நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப … Read more

#Breaking:பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி:பிரதமர் மோடியை,அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது நேரில் சந்தித்துள்ளார். திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமரை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.அந்த வகையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை தந்தார். சந்திப்பு: நாடாளுமன்றம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில்பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார். பிரதமரிடம் முதல்வர் பேச்சுவார்த்தை: … Read more

#BREAKING : 3 நாள் பயணமாக பிப்.7-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பிப்.7-ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, … Read more

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் டெல்லி சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக இன்று டெல்லி பயணம்…!

தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக இன்று டெல்லி பயணம். கடந்த வாரம் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில் ,தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் முதல் முறையாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு … Read more

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்.!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை 7 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக தகவல். தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. டெல்லி செல்லும் தமிழக ஆளுநர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மரியாதை நியமித்தமாக சந்திக்கஉள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, நாகாலாந்து கவர்னராக பணியாற்றி … Read more