அதிரடி…திருமணமாகாத மகள்கள் பெற்றோரிடம் இதனை கேட்க உரிமை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Chhattisgarh:திருமணமாகாத மகள் திருமணச் செலவுகளை பெற்றோரிடம் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்,1956-ன் கீழ் திருமணமாகாத மகள்கள் தங்கள் பெற்றோரிடம் திருமணச் செலவுகளைக் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், “இந்திய சமுதாயத்தில் பொதுவாக திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணத்தின் போதும் பெற்றோர் செலவுகள் செய்ய வேண்டும்” என்றும் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

திருமண செலவுகளுக்காக:

பிலாய் எஃகு ஆலையில் பணிபுரிந்த பானு ராம்,ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையாக 75 லட்சம் கிடைத்துள்ளது. இந்நிலையில்,அவரது மகள் ராஜேஸ்வரி,திருமண செலவுகளுக்காக தனக்கு ரூ.25 லட்சத்தை வழங்குமாறு உத்தரவிடக் கோரி சத்தீஸ்கர் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல்முறையீடு:

இதனையடுத்து,தனது திருமணத்திற்காக 25 லட்சம் ரூபாய் கோரிய வழக்கில் குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கௌதம் பாதுரி மற்றும் சஞ்சய் எஸ் அகர்வால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

இந்நிலையில்,திருமணமாகாத மகள்கள் தங்கள் பெற்றோரிடம் திருமணத்திற்கான செலவுகளைக் கோரலாம் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களும் மறுப்பு தெரிவிக்க முடியாது:

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956 இன் பிரிவு 20ன் கீழ், “மகளின் திருமணத்திற்கு முன்னாள் நியாயமான செலவுகள் மற்றும் அவரது திருமணத்திற்கான செலவுகள் ஆகியவை உரிமையில் அடங்கும். இந்திய சமுதாயத்தில்,பொதுவாக திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமணத்தின் போது பெற்றோர்கள் செலவுகள் செய்ய வேண்டும்.எனவே, திருமணமாகாத மகள்கள் இத்தகைய உரிமைகளைக் கோரும்போது நீதிமன்றங்களும் மறுப்பு தெரிவிக்க முடியாது”,என்று தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த வழக்கை மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது.அதன்படி,இந்த வழக்கானது ஏப்ரல் 25 ஆம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.