இட ஒதுக்கீடு.. வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை – ஈபிஎஸ் குற்றச்சாட்டு

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு 26-2-2021, சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அமலுக்கு வந்தது. ஆனால் அதை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று இருக்கும்போதே வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிரான … Read more

#Breaking:10.5% இட ஒதுக்கீடு – அமைச்சர் துரைமுருகன் அளித்த உறுதி!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி. முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க … Read more

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.அதனை விசாரித்த நீதிபதிகள் 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தனர்.  இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் … Read more

“விரைவில் முழு வெற்றி” – பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!

வன்னியர் இட ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை, நியமனங்களுக்கு தடை இல்லை, விரைவில் முழு வெற்றி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.அதேநேரத்தில்,இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் … Read more

#BREAKING: 10.5% ரத்துக்கு எதிரான மேல்முறையீடு – நாளை விசாரணை!

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை விசாரணை. வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வன்னியர் ஒதுக்கீடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தது. அதனடிப்படையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர் … Read more

#Breaking:வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசால் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட  10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.100 பக்கங்களை கொண்ட அந்த மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு … Read more

நடிகர் சூர்யாவை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்த பாமக இளைஞரணித் தலைவரின் 9 முக்கிய கேள்விகள்!

ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது என்று கூறி 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இயக்குனர் ஞானவேல் அவர்களது இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் மணிகண்டன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தாழ்த்தப்பட்ட … Read more

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5 … Read more

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு போராட்டம்- 204 வழக்குகள் பதிவு..!

உள்ஒதுக்கீடு போராட்டங்களில் ஈடுபட்ட பாமகவை சார்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாமக வன்னியர் சங்க போராட்டத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு நடவடிக்கை கோரி வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி போராட்டங்களில் ஈடுபட்ட பாமகவை சார்ந்த 35,554 பேர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு தற்காலிக … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில்  வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக சட்டமன்றத்தில் மசோதா … Read more