சனாதன பேச்சு…! அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

Udhayanidhi stalin: நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது, ஒரு அமைச்சர் என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சனாதன வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார், அவரின் பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் விவாதத்தை கிளப்பியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். Read More – தண்டனையை எதிர்த்து பொன்முடி … Read more

2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

Supreme Court

திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக … Read more

சட்டப்பிரிவு 370 – தீர்ப்பு வெளியாகும் முன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட மெகபூபா முப்தி..!

Mehbooba Mufti

கடந்த 2019ஆம்  ஆண்டு  ஆளும் பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது . காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக காஷ்மீர் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறாமல் உள்ளது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் … Read more

பதவி நீக்கம்… உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகுவா மொய்த்ரா..!

Mahuva Moitra

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக, நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்… அமைச்சர் … Read more

ஆளுநர் – முதல்வர் அமர்ந்து பேச வேண்டும் – உச்சநீதிமன்றம்

Governor RN Ravi - Supreme court

தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் … Read more

அரசியல் ஆதாயம் காணும் இடம் இதுவல்ல..! – உச்சநீதிமன்றம்

supreme court of india

கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த நவ.2-ஆம் தேதி ஆளுநர் ஆரீப் முகமது கான் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. முன்னதாக நேற்று நிலுவையில் இருந்த 8 மசோதாக்களில் 7 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஒரு மசோதாவுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில், கேரள ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று … Read more

தமிழக ஆளுநர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -ம் கே.எஸ்.அழகிரி

ksalagiri

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எல்லை மீறுகின்ற ஆளுநர்களின் தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது. ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ரவி முன்பே இதை தெரிந்து வைத்திருக்கலாம். அல்லாது இவர் தெரிந்தும் தெரியாதது போல நடித்திருக்கலாம் என சந்தேகம் … Read more

உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!

Supreme Court of India - Delhi CM Arvind Kejriwal

டெல்லி அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதாவது, டெல்லியை ஹரியானா , ராஜஸ்தான் மாநிலத்துடன் இணைக்கும், பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) சாலை அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் 82.15 கிமீ நீள பாதைக்கு ரூ.31,632 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் டெல்லி – மீரட் தொலைவை 60 நிமிடங்களில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் … Read more

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை – தலைமை நீதிபதி

rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தாமதித்து வந்த ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. தமிழ்நாடு அரசு: அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில்,  எந்த … Read more

தொடர் மருத்துவ சிகிச்சை… இன்றாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

senthil balaji

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, … Read more