இட ஒதுக்கீடு.. வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை – ஈபிஎஸ் குற்றச்சாட்டு

வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு 26-2-2021, சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அமலுக்கு வந்தது. ஆனால் அதை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அப்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது.

இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று இருக்கும்போதே வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர்கள் சரியாக வாதாடவில்லை என்றும் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் குற்றசாட்டினார். 10.5% வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்றார். 10.5% இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளையில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து ஏன் வாதாடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு வழங்கிய 10.5% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்