மாநிலத்தை விட மத்திய அரசே அதிக வரி விதிக்கிறது -துணை முதல்வர் அஜித் பவார் குற்றச்சாட்டு!

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.அதே சமயம்,சில மாநிலங்களில் சமையல் எரிவாய் சிலிண்டர் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் வரி விதிக்க விரும்பவில்லை எனவும்,மாறாக எரிவாயு மீதான வரியை குறைத்துள்ளதாகவும்,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மேலும்,மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிக்கிறது.

எனவே,மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் எனவும்,இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

மேலும்,டெல்லி அரசின் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் திட்டம் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்:குடிநீர் மற்றும் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதன் காரணமாக அரசின் வளர்ச்சி வருவாய் தீர்ந்துவிடும் எனவும்,எனவே நீண்ட கால வளர்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.