வருமான வரி விதிகளில் புதிய மாற்றம்… இன்று முதல் அமல்!

income tax

New tax rules: வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது. 2024-25 புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்திய வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரி திட்டமிடலை எளிதாகுவதற்கும், வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளை அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி முறை (New … Read more

காலாண்டு வரி உயர்வு: தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

lorry

காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 … Read more

மாநிலங்களுக்கு ரூ.72,000 கோடியை விடுவித்த மத்திய  அரசு..!

மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை  மாநிலங்களுக்கு 14 தவணைகளில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த ஆண்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.10.21 லட்சம் கோடியை விடுவிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான வரி ரூ.72,961.21 கோடியை   நவம்பர் 10-ஆம் … Read more

வருமான வரி; காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை என மத்திய அரசு அறிவிப்பு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டு … Read more

#BREAKING: உயர்தர மதுபான விடுதி – வரி வசூலிக்க தடை!

உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு.  உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரி சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம்! – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான வணிக வரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,”எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மக்கள் தாங்கள் பெறும் பொருளுக்கான விலைபட்டியலை கேட்டுப்பெற “எனது விலைப்பட்டியல் … Read more

மாநிலத்தை விட மத்திய அரசே அதிக வரி விதிக்கிறது -துணை முதல்வர் அஜித் பவார் குற்றச்சாட்டு!

அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.அதே சமயம்,சில மாநிலங்களில் சமையல் எரிவாய் சிலிண்டர் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் வரி விதிக்க விரும்பவில்லை எனவும்,மாறாக எரிவாயு மீதான வரியை குறைத்துள்ளதாகவும்,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மேலும்,மாநிலத்தை விட மத்திய அரசு அதிக வரி விதிக்கிறது. எனவே,மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் எனவும்,இதனை மத்திய அரசு … Read more

#Breaking:தமிழகத்தில் சொத்து வரி 150% வரை உயர்வு – அரசு உத்தரவு!

தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் உள்ள சொத்து வரி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 – 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் … Read more

வரிச்சலுகைகள் கிடைக்காத வருத்தம் ; மீம்ஸ் மூலம் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

மத்திய பட்ஜெட்டில்  தனி நபர் வருமான வரி  சலுகை குறித்த அறிவிப்பு வெளியாகாததால் ஏமாற்றமடைந்த பலர் ட்விட்டரில் மீம்ஸ் மூலம் தங்கள் வருத்தத்தை  வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனாவின் மூன்றாவது அலைக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய  பட்ஜெட் தாக்கலை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 92 நிமிடங்கள் (1 மணி நேரம் 32 நிமிடம் ) உரையாற்றினார். பொதுமக்கள் கடந்த சில வருடங்களாக  ஒவ்வொரு முறையும் பட்ஜெட் … Read more

இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரி 50% குறைப்பு ….!

மகாராஷ்டிரா அரசு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீதான கலால் வரியை 50% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்படக்கூடிய ஸ்காட்ச் விஸ்கியின் விலை மற்ற மாநிலங்களின் விலைக்கு இணையாக கொண்டு வருவதற்காக அதன் மீதான கலால் வரி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி 300 சதவீதத்திலிருந்து உற்பத்தி செலவில் 150 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 250 கோடி வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 100 … Read more