Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுகாலாண்டு வரி உயர்வு: தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

காலாண்டு வரி உயர்வு: தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!

காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் என 25 லட்சம் வாகனங்கள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படட கூடும் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், லாரி ஓடாத காரணத்தால், கொடிக்கணக்கிலான சரக்குகள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 6ம் தேதி சேலம் கொண்டலாம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் தனராஜ், காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது, மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து 20 நாட்கள் கடந்தும், அரசு பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என கூறினார்.

https://dinasuvadu.com/tamil-nadu-government-order-to-give-20-bonus-to-tasmac-employees/

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து 55,000 மணல் லாரிகள், 6.5 லட்சம் கனரக வாகனங்கள் உட்பட 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.