வணிக வரியில் போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – அமைச்சர்

பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, 20 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிக வரித்துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வரி செலுத்துவதற்கான போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய … Read more

வரி வசூலிக்காத அதிகாரிகள் தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்று கொள்வார்களா..? – உயர்நீதிமன்றம்

சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் அவர்கள் ஏற்பார்களா? தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த நிலையில் நுழைவு வரியிலிருந்து விலக்கு கூறியுள்ளனர்.  இதுதொடர்பான வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இறக்குமதி காருக்கு நுழைவு வரி ரத்து வழக்கை, 2018-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையிலும், வரியை வசூலிக்காமல் அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர். … Read more

“வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்” – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ..!

வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்;ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது என்றுதமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவை பற்றி விவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதற்குமுன் 2001ல் அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனையடுத்து,செய்தியாளர்களிடம்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: “வரியே … Read more

நடிகர் தனுஷ் 48 மணி நேரத்திற்குள் காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவு!

நடிகர் தனுஷ் 48 மணி நேரத்திற்குள் தனது சொகுசு காருக்கான வரி பாக்கியை செலுத்த வேண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். … Read more

நடிகர் தனுஷின் சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு…!

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு வெளியாகவுள்ளது. நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 … Read more

#Breaking: நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு … Read more

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை… டிரம்ப் மீது குற்றச்சாட்டு…

 டிரம்ப் தனது வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை டைம்ஸ் குற்றச்சாட்டு. டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. கடந்த 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார்.  டிரம்ப் தனது … Read more

செப்டம்பர் 1 முதல் தாமத ஜிஎஸ்டிக்கு வட்டி வசூல் – சிபிஐசி அதிரடி முடிவு.!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தாமதமாக செலுத்துவதற்கான வட்டி செப்டம்பர் 1ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) முடிவு செய்துள்ளது. அதாவது, கடந்த 2017-ஆம் ஆண்டு (ஜிஎஸ்டி) வரி பிடிப்பு அமலுக்கு வந்த பிறகு, பலர் ஜிஎஸ்டி வரியை தாமதமாக செலுத்தியுள்ளனர். அப்படி தாமதமாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்டிக்கு வரவேண்டிய வட்டி நிலுவை தொகை ரூ.40,000 கோடியை மீட்டெடுப்பதற்கான உத்தரவு குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய … Read more

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து.!

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் பிரிவு 33-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. வரி உயர்வை எதிர்த்து பாமக நிர்வாகி தேவமணி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கின் காரணமாக ஜிஎஸ்டி செலுத்த மூன்று மாத கால அவகாசம்… தனது இணைய பக்கத்தில் சிபிஐசி தகவல்…

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தொழில் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கை ஜூன் இறுதிக்குள் தாக்கல் செய்வது என்பது மிகவும் கடினம் மற்றும் இயலாத ஒன்று. எனவே, தொழில் நிறுவனங்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவா்கள் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 3 மாதங்கள், அதாவது செப்டம்பா் மாத … Read more