நடிகர் தனுஷின் சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு…!

நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்த சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் நாளை உத்தரவு வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் அவர்கள் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்குக்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் தான் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Rebekal