#BREAKING: ராமநாதபுரத்தில் ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கலநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்துபெற்றதாகும்.

தேவர் ஜெயந்தி.! தேசிய நெடுஞ்சாலையில் 2 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு.!

நாளை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை அக்டோபர் 20ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் மரியாதையை செலுத்த உள்ளார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் … Read more

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

#PublicExam: 847 பேர் ஆப்சென்ட் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல். தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து,  இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு … Read more

ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் … Read more

#Breaking:கல்லூரி மாணவர் சந்தேக மரணம்;”உடலை மறுஉடற்கூராய்வு செய்க”- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்  உடலை மறுஉடற்கூராய்வு செய்வதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் … Read more

#Breaking:கனமழை எதிரொலி:4 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில்,இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக … Read more

முன்விரோதம் காரணமாக இளைஞர் குத்திக் கொலை..!

ராமநாதபுரம் அருகே உள்ள கள்ளரி தெரு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருடைய மகன் அருண் பிரகாஷ். மேலும் அருண் பிரகாஷ் நண்பர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலகாரணங்களால் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் நேற்று பகலில் அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஸ்வரன் என்பவரும் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் திடீரென அருண்பிரகாஷ் முதுகு பகுதியில் கத்தியால் குத்தினர், அவருடன் இருந்த அவரது நண்பர் யோகேஷ்வரனிற்கும் வயிற்றில் … Read more

திருப்பூர், ராமநாதபுரத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு.!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக பல நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள்கொரோனா வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனையடுத்து, சில மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் பால், மருந்து கடை தவிர பிற கடைகள் மதியம் 3 மணி வரை மட்டுமே இயங்கும் என … Read more

எல்லையில் வீர‌மரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம்…!

எல்லையில் வீர‌மரணம் அடைந்த தமிழக வீர‌ர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில்  20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.  நேற்று வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.  இதன் பின்னர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் … Read more