ஜவுளி நிறுவனங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan

நூல் விலை ஏற்றம், மின் கட்ட டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளூர் வர்த்தகமும், வெளிநாடு ஏற்றுமதியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்கட்டண உயர்வால் கொங்கு மண்டல பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர … Read more

ஜல்லிக்கட்டு நடத்த தடைகோரி மனு – பரிசீலிக்க உத்தரவு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனு மீது திருப்பூர் ஆட்சியர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு … Read more

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே … Read more

பைக் மீது அரசு பேருந்து மோதல் – கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு!

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.!

திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று  நெல்லை, … Read more

#BREAKING: ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு!

ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட … Read more

#BREAKING: திடீர் அறிவிப்பு.. இஸ்லாமிய அமைப்புகள் கொடுத்த ஷாக்! மாட்டிறைச்சி பிரியாணி இலவசம்!

மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக … Read more

திருப்பூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை. திருப்பூர் மாநகராட்சி 36-ஆவது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. தேர்தல் செலவுக்காக ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில், 44 ஓட்டுகள் மட்டும் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறவில்லை என்பது … Read more

இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள்..!

இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் … Read more

திருப்பூரில் 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்,20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட … Read more