நாளை மறுநாள் விலகுகிறது வடகிழக்கு பருவமழை.!

TN Rain

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும், … Read more

கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்டத்திற்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு..!

schools holidays

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் … Read more

டிச.1 முதல் 4 வரை இந்தந்த மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் முக்கிய உத்தரவு!

heavy rain

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்றும்  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் டிசம்பர் 4 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஏற்கனவே, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

heavy rain

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புறநகர் ரயில் : சென்னையில் திடீரென பெய்த … Read more

#Breaking : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.? மீனவர்களுக்கும் எச்சரிக்கை.!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . இதன் காரணமாக வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் … Read more

எந்த தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முழு விவரம்.!

இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.அது  இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். … Read more

விருதுநகர் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! 150 பேர் சிக்கி தவிப்பு.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு சென்ற 150க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு நீர்நிலைகளில் நீர் நிரம்பி வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எனும் ஊரில் அய்யனார் கோவில் காட்டாட்ற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  கோவிலுக்கு சென்ற 150க்கும் … Read more

அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்.!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல். வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழக வானிலை, மலையளவு குறித்த விவரங்களை வெளியிட்டார். அவர் குறிப்பிடுகையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என தெரிவித்தார். அதிகபட்சமாக மயிலாடுதுறையில் அதிக மலையளவு பதிவாகியுள்ளது … Read more

கனமழை எதிரொலி.! சென்னையில் 2 சுரங்கபாதைகள் மூடல்.! மாற்றுவழிகள் ஏற்பாடு.!

கனமழை காரணமாக சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.  சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடஙக்ளில் மழைநீர் தேங்கி வருகிறது. அதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் சென்னை சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளன. சூரபட்டு சுரங்கப்பாதையில் செல்வதற்கு பதிலாக 100அடி சாலையில் செல்லவும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் செல்பவர்கள் … Read more

#Breaking : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படி மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், … Read more