பழனியில் நாளை ரோப்கார் சேவை ரத்து…!

பழனி கோவிலில் நாளை ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை ரத்து. திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் நாளை ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் காரணமாக ரோப்கார் சேவை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ரோப்கார் சேவைக்கு பதிலாக மாற்று வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#BREAKING: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை … Read more

#Breaking:ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு அனுமதி – பழனி தேவஸ்தானம்…!

ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று  பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தளர்வுகளின்படி,அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்று … Read more

#BREAKING: பழனி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்- முதல்வர் அறிவிப்பு..!

பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என  முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  இதனால், அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக, திமுக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்நிலையில், பழனியில் பரப்புரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கடவுளே இல்லை என கூறி … Read more

பழனியில் படப்பிடிப்பை தொடங்கிய AV33 படக்குழு..!!

அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , … Read more

#BREAKING: வீடு தேடி வரும் பழநி பஞ்சாமிர்தம்- அமைச்சர் அறிவிப்பு..!

இந்து சமய அறநிலை துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளிமாநிலத்தவர்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் பிரசாத்தினை பக்தர்களின் இல்லத்தில் கொண்டு செல்லும் நடைமுறை அறிமுகப்படுத்தும் விதமாக பழனி கோவிலின் பிரசித்திபெற்ற பிரசாதமான அரை கிலோ எடை கொண்ட லேமினேட்டட் … Read more

பழனியில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள்.!

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி. தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14 முதல் 31-ம் தேதி வரை ஒரு நாளைக்கு 25,000 பக்தர்கள் மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார். மேலும், பழனி கோவிலுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்றும் அங்கபிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்கள் செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

வீரமரணமடைந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரபல நடிகர்.!

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி … Read more

எல்லையில் வீர‌மரணம் அடைந்த பழனியின் உடல் நல்லடக்கம்…!

எல்லையில் வீர‌மரணம் அடைந்த தமிழக வீர‌ர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில்  20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.  நேற்று வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.  இதன் பின்னர் பழனியின் சொந்த ஊரான ராமநாதபுரம் … Read more

லடாக் தாக்குதலில் வீர மரணமடைந்த பழனியின் உடல் மதுரை வந்தடைந்தது.!

வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில்  20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் … Read more