அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு திடீர் உத்தரவு.!

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 2,78 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை நிரப்ப தமிழக அரசு சார்பில் வருவாய்துறை ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவம்பர் 14ஆம் தேதி பரிசளிக்கப்பட்டு, முறையான நேர்காணல் நடத்தில்டிசம்பர் 19ஆம் தேதி பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

#BREAKING: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31-ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. அதில், ஜன.14 முதல் 18 வரை … Read more

நீலகிரியில் நாளை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு. படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் … Read more

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மக்களுக்கு அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி … Read more

டிச.20-ல் ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்!

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும். அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி … Read more

திருவண்ணாமலை கோவில் – மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை!

கொரோனா கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலை கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை.  திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையை தொடங்கினார்..!

கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தடுப்பு, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில் 22 ஆட்சியர்கள் நேரில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இரண்டு புதிய ஆட்சியர் உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 ஆட்சியர்கள் … Read more

#Breaking: சிறுமி எரித்து கொன்ற வழக்கு.. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள், வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்கு-மூலம் மூலம் போலீஸார் … Read more

சிறுமி எரித்து கொன்ற 2 பேர் மீது “குண்டாஸ்”..அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.!

விழுப்புரத்தில் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் … Read more

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு – சேலம் மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை.!

மேட்டூர் ஆணை தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை. மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது.  இதனால் குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் … Read more