அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது- முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் . ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் … Read more

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது- பன்னீர்செல்வம்

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவ வசதி பெறும் எண்ணத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் … Read more

புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பங்கேற்றனர் . மத்திய,மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.345 கோடியில் பட்டணம்காத்தானில் மருத்துவக் கல்லூரி அமைகிறது.

ராமநாதபுரத்தில் இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல்.!

ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த  அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  

ரூ.325 கோடி மதிப்பிலான மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல்..! 3,000 போலீசார் குவிப்பு.!

ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.  இந்த  அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த  அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் … Read more

அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளி பகுதியில் கல்குண்டு எனும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் மின்மோட்டாரை இயக்கும் பொத்தான் சரிவர வேலை செய்யததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் கார்த்தீஸ்வரன் எனும் மாணவன் அந்த மின்மோட்டாரை ஆன் செய்கையில் மின்சாரம் தாக்கி அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ரஷ்யாவில் தமிழக பொறியாளரை தமிழர்களே கும்பல் சேர்த்து பணம் பறித்த சோகம்! 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி என்ற ஊரில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன், தனது தொழில்  தொடங்குவது சம்பந்தமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நான்கு என அனைவரும் நட்பாக பழகி உள்ளனர். பிறகு, அவரை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த … Read more

மக்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கும் அபிநந்தன்!!திருமணத்தில் வைக்கப்பட்ட அபிநந்தன் புகைப்படம்!!

பாகிஸ்தானிடமிருந்து  இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.  ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின்  மிராஜ் … Read more

கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு ….!!

ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.இந்நிலையில் இதனை கண்ட சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு பத்திரமாக கொண்டு … Read more