22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – பள்ளிக்கல்வித்துறை தகவல்

கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுறுத்தலை வழங்கினர். அதில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகளவில் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மாணவர்களை சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த தகவலையும் அதிகாரிகள் வெளியிட்டனர். அதில், தமிழகத்தில், 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும் உள்ளனர். 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும் உள்ளனர். 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்கள் பயில்கின்றனர் 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன.

ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை 22 என்ற அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை உள்ளது என்றும் 11 பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே உள்ளனர் எனவும் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும் உள்ளனர் என ஆசிரியர் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்டனர்.

இதனிடையே, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்களும், 11ம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்களும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 1,95,292 மாணவர்களும் என மொத்தம் 6,79,467 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தரும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கவனத்திற்கு… 11,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – கல்வி வாரியம் அறிவிப்பு!

exam

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் இன்று காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் எனவும், 150 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,ஆந்திராவில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால்,பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இன்டர் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என ஆந்திரப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மே 25 ஆம் தேதி அன்று நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம்,நாளை(மே 12, 2022) முதல் மற்ற அனைத்து தேர்வுகளும் ஏற்கனவே குறித்த அட்டவணைப்படி நடைபெறும் எனவும்,அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களே ரெடியா…இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு – பின்பற்ற வேண்டியவை இதுதான்!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் ,மே 5 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது 9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில்,முதல் நாள் தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது.அதன்படி, பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.65 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.மேலும்,பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் இதோ:

 • பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 • இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
 • 10.15-க்கு ஐந்து முறை மணி அடிக்கப்படும்,அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.
 • 1.10-க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
 • வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

#JustNow: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 3 மாணவர்கள் முறைகேடு!

12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்.

தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 5ம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாட தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என்று 3 பேர் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பு அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி மற்றும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#PublicExam: 847 பேர் ஆப்சென்ட் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல்.

தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து,  இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து 802 மாணவ – மாணவியர் பங்கேற்க உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,194 மாணவர்களில் 847 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் கூறப்படுகிறது. தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் ஆன நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  இதுபோன்று, திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 16,294 மாணவ மாணவிகளில் 738 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தகவல் கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு – ஜூன் 2 முதல்..! அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாகவே, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், 12ம் வகுப்புகளுக்கு நேற்றும் மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இன்றும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், 11ம் வகுப்புக்கு மாதம் இறுதியில் பொதுத்தேர்வு தொடங்குகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று தொடங்கிய பொதுத்தேர்வு வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்களே…இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – இதை பின்பற்றுங்கள்!

Public exam

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.

ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.அதன்படி,பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.93 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.இதற்காக,4,092 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளன.மேலும், இத்தேர்வானது வருகின்ற மே 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.மேலும்,பொதுத்தேர்வின் போது மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டியவை இதோ:

 • பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 • இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
 • 10.15-க்கு ஐந்து முறை மணி அடிக்கப்படும்,அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.
 • 1.10-க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
 • வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்து,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ளன.மேலும்,10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

மாணவர்கள் கவனத்திற்கு!இன்று +2 பொதுத்தேர்வு – பின்பற்றப்பட வேண்டியவை என்னென்ன?..!

exam

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது.அதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது.

அதன்படி,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 8,37,317 பேர் எழுதுகின்றனர்.மேலும்,தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,இன்று தொடங்கவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.முன்னதாக மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக்கு 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 • இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்க்கவும்,அடுத்த 5 நிமிடம் தேர்வர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
 • 10.15-க்கு மணி ஐந்து முறை அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம்.
 • 1.10க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும்,அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
 • வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்.மேலும்,மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால்,தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்து,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும்(மே 6 ஆம் தேதியும்),பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.மேலும்,10, 11 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

#BREAKING: பொதுத்தேர்வு – செல்போனுக்கு தடை.. ஆள் மாறாட்டம் செய்தால் வாழ்நாள் தடை!

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும், 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்துக்கு.. இந்த நேரத்தில் எச்சரிக்கை மணி!

தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும் என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேர்வும் எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் குறிப்பாக தேர்வு எழுதும் நாளன்று காலை 8 மணிக்கு, மாணவர்கள் தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும்.

இதுபோன்று காலை 9.45 மணிக்கு முதல் மணி, ஒரு முறை அடிக்கப்படும், அப்போது தேர்வர்கள் தேர்வறைக்கு வருகை புரிதல் வேண்டும். 10.15க்கு ஐந்தாவது மணி ஐந்து முறை அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கலாம். 1.10க்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும், அந்த நேரத்தில் தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள் பெற்றிருப்பின் அதனை முதன்மை விடைத்தாளுடன் வெள்ளை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் 1.15க்கு தேர்வு நேரம் முடிவுக்கு லாங் பெல் அடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.