ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை.

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் அல்லி தெரிவித்துள்ளது மீண்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனிடையே, நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்