10-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

May 19, 2023 - 05:19
 0  1

10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். அதன்படி, தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில், பெரம்பலூர் - 97.67%, சிவகங்கை - 97.53%, விருதுநகர் - 96.22%, கன்னியாகுமரி - 95.99%, தூத்துக்குடி - 95.58% ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் 87.45% தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10- ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow