விஜய்சேதுபதி பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை காலமானார்..!

Nov 13, 2023 - 06:36
 0  0
விஜய்சேதுபதி பட எழுத்தாளர் ராசீ தங்கதுரை காலமானார்..!

பிரபல தமிழ் திரைப்பட வசன எழுத்தாளர் 'ராசீ தங்கதுரை' உடல் நலக்குறைவால்  ஆண்டிப்பட்டி அருகே காலமானார். இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராசீ தங்கதுரை சொந்த ஊரான கதிர் நரசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் வெளியான  ‘மேற்குத் 'தொடர்ச்சி மலை' படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். பின்னர் வெளியான ’தேன்’ திரைபடத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow