இன்றைய ஆட்டம்..! 'கொல்கத்தா' கோட்டையில் கொடியை பறக்கவிடுமா 'ஹைதராபாத்'.?

Apr 14, 2023 - 06:54
 0  2

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை.

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது.

கடைசியாக கொல்கத்தா அணி இந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு ரிங் அதிரடியாக விளையாடி கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் வரலாறில் கடைசி ஓவரில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த போட்டியிலும் கொல்கத்தா அணி தான் வெற்றிபெற்றது.

புள்ளி விவர பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி சென்றது. இந்த அணியை போல  ஹைதராபாத் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.

இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 23 போட்டிகளில் மோதியதில் 8 முறை ஹைதராபாத் அணியும், 15 முறை  கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow