தமிழக அரசு ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன்

Apr 22, 2023 - 06:28
 0  1

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் பேட்டி. முதல்வருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி 

தமிழகத்தில்  சமீப காலமாக  சில இடங்களில் ஆணவக்கொலை நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கிருஷ்ணகிரியில் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததற்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் பேட்டி 

இந்த நிலையில், மகனை கொலை செய்த தந்தை மீது போலீசார் வழக்குபதிவு செய்து,  அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த ஆணவக்கொலை குறித்து செய்தியாளர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், 'தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் சமீபத்தில் அதிகரித்து உள்ளது. வட மாநிலத்தில் தான் இது போல் நிகழும்; தமிழகத்தில் அவ்வப்போது நடந்து இருந்தாலும், கிருஷ்ணகிரியில் அண்மைக்காலமாக ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும். 12 மணி நேர வேலை மசோதா, தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளது; தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான இந்த மசோதா, திமுகவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்; இந்த தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக வலியுறுத்தும் என தெரிவித்துள்ளார்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow