அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது – எம்.எல்.ஏ. கீதாஜீவன்

  கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, … Read more

தூத்துக்குடியில் தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் ….!!

தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் அமைந்துள்ள புல்லுத்தோட்டம் பகுதியில் மழை பெய்து முடிந்து நான்கு நாட்கள் ஆகியும் மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் கருதி உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயிர்காப்பீட்டு தொகையை காலதாமம் செய்யமால் வழங்க கோரி துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுக்கை

  கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக அய்யனேரி, கொம்பங்குளம், பழைய அப்பனேரி,புதுஅப்பனேரி மற்றும் சித்தரம்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி,கம்பு, மக்கச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அய்யனேரியை தவிர மற்ற கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடையே தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவது மட்டுமின்றி, குழப்பம் நிலவி வருவதால் விடுபட்ட அய்யனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீட்டு தொகையினை … Read more

தமிழகத்தில் அதிமுக, திமுக தவிர வேறு யாரும் நிலைக்க முடியாது – அமைச்சர் கடம்பூர்செ.ராஜீ

  கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ சுமார் 35லட்ச ரூபாய் மதிப்பிட்டில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியினை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர்.ஜனார்த்தனன், நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நகர பொருளாளார் வாசமுத்து, ராமசந்திரன், வண்டானம் கருப்பசாமி, செல்லையா, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த … Read more

தூத்துக்குடிஅனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. உடனடியாக இந்த பாய்லர் சரி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது அனல் மின் நிலைய நிர்வாகமும்,அதன் ஊழியர்களும்,சரி செய்யப்படும் கால அளவு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

கோவில்பட்டி காட்டு நாயக்கன் சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

இன்று (15.3.18) காலை கோவில்பட்டி வாட்டாச்சியர் அலுவலகத்தில் காட்டு நாயக்கன் சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு ex.MLA, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன்,ஒன்றியச்செயலாளர் ஜோதிபாசு,மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முருகன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட சுமார் … Read more

வோல்க்ஸ்வேகன் போலோபேஸ் (Volkswagen Polopece), வென்ட்டோ (Vento) கார்களின் புதிய மாடல் .!

வோல்க்ஸ்வேகன்(Volkswagen)போலோ பேஸ் மற்றும் வென்ட்டோ(Vento) ஸ்போர்ட் என்ற பெயரில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த சிறப்பு பதிப்பு மாடல்களுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படவில்லை. வோல்க்ஸ்வேகன் போலோ பேஸ் சிறப்பு பதிப்பு மாடலில் 15 அங்குல டைமண்ட் கட் ரேஸர் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கார் 1.0 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.மேலும் பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. … Read more

ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான வழக்கு ; தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவு…!!

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம்  சார்பில் பள்ளி மாணவர்கள்,பெண்கள்,அ.குமாரரெட்டியார் புறம் கிராம பொதுமக்கள் இரு நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ,பின்னர் கைது  செய்யப்பட்டனர்  … Read more

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தீ விபத்து…!!

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் லெவஞ்சிரம் அருகில் சோலத்தட்டை ஏற்றி வந்த மினி லாரி மின் வயரில் உரசி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.உடன் பொதுமக்களும் பலர் உதவினர்.  

தமிழகத்தில் திரையரங்குகளை இழுத்து மூட முடிவு.?

கியூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் டிஜிட்டல் மற்றும் முப்பரிமான முறையில் ஒளிபரப்பு செய்ய அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கமும், டிஜிட்டல் நிறுவனங்களும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே தமிழகத்தில் பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் கூட இல்லாமல் ரிலீஸ் ஆன படங்களே … Read more