ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனை – பேரவையில் முதல்வர் பேச்சு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனத்தின் மேல் ஏறி நின்று காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனைக்கதை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே 22 ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் வரும் போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி 13 பேரை காவல்துறை சுட்டு கொன்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.     … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் …!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் ஏ.பீ.சி.மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, … Read more

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்…!!

தூத்துக்குடி மாநகர் 48 வார்டுஇந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று ஆண்டுகாலமாக இலவசவேட்டி சேலை வழங்காததை கண்டித்தும் புழுங்கல்அரிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்குவதை கண்டித்தும் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர துணைதலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.பூமயில் மாவட்டதுணைத் தலைவர் மு கமலம், மாநகரதலைவர் காளியம்மாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கோரிக்கை களை உடணடியாக நிறைவேற்ற உறுதியளித்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் கொடியேற்றம்…!!

  தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற குடவரை கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் இருக்கும் கழுகசாலமூர்த்தி திருக்கோவிலாகும், இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவானது வருட வருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். 13நாள் நடைபெறும் இத்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் … Read more

கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலத்தினை கைப்பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாா் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்..

மு.க.ஸ்டாலின் கைதினை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல்

  தமிழகம் வந்த விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பஸ்நிலையம் அருகே நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு நகரசெயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த சாலை … Read more

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்…!!

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினர் … Read more

எடப்பாடி தூக்கில் தொங்க வேண்டும் – வலு ஓட்ட நறுக்கப்படும் – கே.சி பழனிச்சாமி நீக்கம் மோடியின் விசுவாசம் – ஆவேச தமிழ்பிரசன்னா

  கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமைக்கழக பேச்சாளர் தமிழ்பிரசன்னா பேசுகையில்; திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இனி எதிர்கட்சி தலைவராக கூட முடியாது என்று அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசியுள்ளார். உண்மை தான் அவர் இனி நிரந்தர முதல்வர்;, இனி அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசும் போது வார்த்தைகளை பார்த்து பேசு வேண்டும், ஜெயலலிதா இருக்கும் போது கைநீட்டி பேசியவதற்கு அஞ்சியவர்கள், ஆளில்லாத வானில் வாலை ஆட்டினால் … Read more

அதிமுக நாள்களும், மோடி ஆட்சியின் நாள்களும் எண்ணப்படுகிறது – எம்.எல்.ஏ. கீதாஜீவன்

  கோவில்பட்டியில் கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில் சிலர் முதல்வராக வேண்டும் என்று கட்சி தொடங்குகின்றனர். கொள்கை கோட்பாடு கிடையாது, தமிழகத்தில் வெற்றிடம் இல்லை அதிமுகவில் தான் வெற்றிடம் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்து பிரதமர் மோடி ஆட்டுவிப்பதால் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக, அடிமைகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டுள்ளது, … Read more

மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழா

தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள கிராம தேவதை மேலூர் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் திருக்கோவிலில், 48 வது மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 1008 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசங்களை வைத்து சலசாபிஷேகம் நடைபெற்றது.