பயிர்காப்பீட்டு தொகையை காலதாமம் செய்யமால் வழங்க கோரி துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுக்கை

 

கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக அய்யனேரி, கொம்பங்குளம், பழைய அப்பனேரி,புதுஅப்பனேரி மற்றும் சித்தரம்பட்டி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உளுந்து, பாசி,கம்பு, மக்கச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 2016-17ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடு செலுத்தி இருந்தனர். இந்நிலையில் அய்யனேரியை தவிர மற்ற கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடையே தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவது மட்டுமின்றி, குழப்பம் நிலவி வருவதால் விடுபட்ட அய்யனேரி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்காப்பீட்டு தொகையினை காலதாமதம் செய்யமால் விரைந்து வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் அய்யனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகேயுள்ள கூட்டுறவு சங்கங்கள் துணைப்பதிவாளர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு, தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். இதில் மதிமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment