சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணை….!!!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திருமுருகன் கையெழுத்திட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா லஞ்ச வழக்கு: திடீரென முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…!

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் … Read more

இன்று மதியம் கரையை கடக்கும் பெய்ட்டி புயல்…! 90 கி.மீ முதல் 100 கி.மீ வரை காற்று வீசும் …!வானிலை ஆய்வு மையம்

பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்,  மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் பெய்ட்டி புயலானது தற்போது காக்கிநாடாவில் இருந்து தெற்கே 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது வடக்கு திசை நகர்ந்து இன்று மதியம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும். இதனால் மத்திய மேற்கு வங்க … Read more

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்…!! தூத்துக்குடியில் 1500 போலீசார் குவிப்பு…!!!

ஸ்டெர்லைட் ஆலை விவவகாரத்தால், தூத்துக்குடியில் மீண்டும் கலவரங்கள் வெடிக்காத வண்ணம், 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், தமிழக அரசு சார்பில், ஸ்டெர்லைட் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.

மஹா படம் குறித்து சாதி மத சாயம் பூச வேண்டாம்…!!! இயக்குனர் ஜமீல் வேண்டுகோள்…!!!

இயக்குனர் ஜமீல் மஹா படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இதுவரை ஹன்சிகா நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை ஹன்சிகா தம்மடிப்பது போன்ற கேரக்டேரில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த போஸ்டர் சாதி, மதத்தை குறித்து இழிவாக சித்தரித்திருப்பதாக பலரின் விமர்சனத்துக்கு ஆளானது. ட்வீட்டர் பக்கத்தில் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை செய்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ஜமீல் இவர்களது விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். இயக்குனர் ஜமீல்  கூறியதாவது,ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தான்  உருவாக்கினேன்.சாதி, மதங்கள் … Read more

 2-வது டெஸ்ட்:இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்கு…!சமி அபார பந்துவீச்சு …!

2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி இந்திய அணி  287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடி 326 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இன்று களமிறங்கிய இந்திய அணி 10 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முரளி விஜய் ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். ராகுல் 2 ரன்களில் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி…!வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் …!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது. பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக  வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை … Read more

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது….!!

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் … Read more

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு…!

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதலமைச்சராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் இன்று பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் இன்று  … Read more

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை கவர்ந்த நடிகர் யார் தெரியுமா….!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மிக பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள ஜீரோ படமானது வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஷாருக்கான் கூறியதாவது, தெலுங்கு திரையுலகில் என்னை கவர்ந்த நடிகர் அல்லு அர்ஜுன் என்றும், அவருடன்  இணைந்து ஒரு நாள் செலவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். source : tamil.cinebar.in