டிச.20-ல் ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்!

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும். அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி … Read more

அரசு பள்ளியில் முதல் முதலாக சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்களில் முதல் முதலாக ராமநாதபுரத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், 150 பேர்  மாணவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பள்ளியில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் … Read more

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது…!!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகிலுள்ள புராதானமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த மாதம் 4-ம்தேதி தூக்குபாலத்தின் கிர்டர் பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. பின் பாலம் பலமிழருந்திருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, கடந்த 30 நாட்களாக இந்தப்பாலத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதனிடையே 30 நாட்களுக்குப்பிறகு கப்பல்களுக்கு வழிவிடும் தூக்குபாலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அதன் அடிபாகத்தில் பழுதுகளை சீரமைக்கும்பணி நடைபெற்றது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து தமிழக மீனவர்கள் கரைத்திரும்பினர்.இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு மீனவர்களின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, வேனில் கொண்டுவரப்பட்ட ஆயிரம் மதுபாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதிலிருந்து, பல இடங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் உள்ளது. இதனை அடுத்து, துறைமுக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கிய போது, வேன் டிரைவர் தப்பி ஓடியுள்ளார். அவர் ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில், அட்டைப்பெட்டிகளில் 1000 மது … Read more

பாம்பன் பாலத்திற்கு பதிலாக ரூ.250 கோடி மதிப்பில் புதிய பாலம்- ரயில்வே அமைச்சகம் தகவல்….!!

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் 104 ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாலும், புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு முடிவடைந்து விட்ட நிலையில், 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே, அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுநேர தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பெய்த பருவமழை காரணமாக விவசாயிகள் தங்கள் பணிகளைத் தொடங்கினார். இந்நிலையில் பயிர்கள் விளையும் தருணத்தில் போதிய மழை இல்லாததாலும், ஆர்.எஸ்.மங்கலம் … Read more

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று கடலுக்கு சென்றனர். 570 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மிகுந்த எதிர்பார்ப்போடு புறப்பட்டு சென்றனர். இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்து … Read more

7 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்லும் ராமேஸ்வரம் மீனவர்கள்….!!

புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானதைஅடுத்து கடந்த 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் புயல்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஆந்திர கரையோரம் புயல் கரையை கடந்தது. புயல் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டத்தையடுத்து ராமேஸ்வரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். கடந்த … Read more

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது….!!

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் … Read more