விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். விழுப்புரத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்துள்ளது. கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை சுற்றி இருந்த இரும்பு கூண்டை உடைத்து பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதில் பெரியார் சிலையின் முகப் பகுதி சேதம் அடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    

“கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்” – பாஜகவின் குஷ்பு கண்டனம்!

கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து,இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி … Read more

மாலை அணிவித்து குங்குமம் வைத்து.. பெரியார் சிலை அவமதிப்பு..!

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கோவையில் பரபரப்பு! பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள்!

பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெரியார் சிலை மீண்டும் உடைப்பு! போலீசார் விசாரணை

புதுக்கோட்டை  அருகே பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டடுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தின் சிறந்த சிந்தனையாளராகவும், சமூகப்புரட்சியின் வழிகாட்டியாகவும், புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராகவும் , பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராகவும் , மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகவும்  செயல்பட்ட தந்தை பெரியார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை மீது ஷூ வீசுவது, சிலை மீது  காலணிகளை வைப்பது உள்ளிட்ட செயல் நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சினர் கடும் எதிர்ப்பை … Read more

பெரியாரின் கொள்கையை பாதுகாக்க எதையும் செய்வோம்-உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு .,,

பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்! உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்! என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும்போது “புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை மீண்டும் உடைப்பு !

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியில் இரவில் மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கு முன்  வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்  முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எச்.ராஜா மீது வழக்குபதிய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM)சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு  …!!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,நாகலாந்து ஆகியவைகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் ஆளும் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தோற்கடித்து பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றது. பின்பு திரிபுராவில் மாமேதை லெனினின் சிலை பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தகர்க்கப்பட்டது.அப்போது பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ,தெரிவிப்பதும் பதிவிடுவதும் வழக்கம்.இந்நிலையில் அவர் “திரிபுராவில் லெனினின் சிலை தகர்க்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜாதிவெறியன் பெரியார் சிலை” என பதிவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் … Read more

உ.பி-யில் மீண்டும் உடைக்கபட்ட அம்பேத்கர் சிலை…..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு. அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.