அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

Ayodhya Ram temple

இஸ்லாமியர்கள் பெயரில் போலியாக இமெயில் கணக்கு தொடங்கி, அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் விரைவில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 2 பேரை உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். அயோத்தி ராமர் கோவிலில் வெடிகுண்டு வீசப்படும் என உபி டிஜிபி தலைமையகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 27 அன்று எக்ஸ் தளத்தில் மிரட்டல் இமெயிலில் வந்ததை … Read more

உ.பி-யில் கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.!

Women Gang rape in Agra UP

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர். சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் … Read more

குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Mukhtar Ansari

குண்டர் சட்டத்தில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் மற்றும் அரசியல்வாதியான முக்தர் அன்சாரிக்கு 2009 குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அன்சாரியின் கூட்டாளி சோனு யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த … Read more

டால்பின் – உத்திர பிரதேச மாநில நீர்வாழ் விலங்கு.! முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.!

UP CM Yogi Adityanath

உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு  என அறிவித்தார். இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில்,  உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக … Read more

வீட்டில் தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அடுப்பிலிருந்து தீ மூடப்பட்டபோது வீட்டில் தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், … Read more

நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரிப்பு.. உ.பி.யில் தான் அதிகபட்சம்!

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்ட அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2022-இல் அதிகபட்சமாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் உத்தரபிரதேசத்திலும், இதன்பின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரிலும் பதிவாகியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிக்கிம் விபத்து: 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, அரசு வேலை – உ.பி அரசு அறிவிப்பு

சிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு. சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்த விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் நேற்று ராணுவ வீரர்கள் … Read more

37,000 பெண்களுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித்தொகை – உ.பி அமைச்சர் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர். உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 … Read more

உ.பி: சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம்!

உ.பி.யில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்துகளில் 6 பேர் பலி, 50 பேர் காயம் என தகவல். உத்தரப்பிரதேசம் முழுவதும் இன்று அடர்ந்த மூடுபனி காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுரையா, கான்பூர் தேஹாட், கன்னோஜ், உன்னாவ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் … Read more

75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்!

உ.பி.யில் 75 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயம்.  உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் 75 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. காந்தி தேவி ஜனதா வித்யாலயா பள்ளி மாணவர்களை ஜான்பூரில் இருந்து பிரயாக்ராஜில் உள்ள மங்காருக்கு சுற்றுலா அழைத்துச் … Read more