#IPL2022: மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல். நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் அனுமதியுடன் கடந்த 26-ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதன்படி நடப்பாண்டு … Read more

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் – பிரதமர் மோடி

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று பிரதமர் மோடி தகவல். 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு … Read more

தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து … Read more

#Breaking: உச்சத்தில் கொரோனா.. அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா தொற்று நாடு முழுக்க மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இந்தியாவில் இன்று ஒருநாள் பாதிப்பு முதல் முறையாக 1 லட்சத்தை கடந்தது. கொரோனா தொற்று நாடு … Read more

வெற்றி வேல், வீர வேல்; நல்லா இருக்கீங்களா என்று தமிழில் பேசி மோடி உரை துவக்கம்..!

“நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தமிழில் பேசி தனது உரையை மோடி துவங்கினார். பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய பிரதமர் மோடி வெற்றி வேல், வீர வேல் என்று தமிழில் பேசிய பின்னர், “நல்லா இருக்கீங்களா, மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தமிழில் பேசி தனது உரையை துவங்கினார். தமிழ் கலாச்சாரத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. … Read more

படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு – பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்பு

டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக படை வீரர்கள் பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. டெல்லியில் விஜய் சவுக்கில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர். குடியரசு தின கொண்டாட்டங்களில் நிறைவாக பாசறை திரும்புதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. … Read more

ஜெய் ஸ்ரீராம் முழக்கம்: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச மறுப்பு.!

நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார். இன்று நாடு முழுவதும் நேதாஜியின் பிறந்த நாள் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச … Read more

பிரதமர் மோடி ஏன் இரட்டை வேடம் போடுகிறார்? – நாராயணசாமி

உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிருந்த நிலையில், பிரதமர் மோடியிடம் வாதிட தயார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் இன்று காணொலி வாயிலாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி … Read more

நீங்கள் செய்தால் சரி., நாங்கள் செய்தால் தவறா? – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!

வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார். குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கட்ச் பகுதி அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது என்றும் கட்ச் பகுதி மக்கள் ஏமாற்றத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை குஜராத் அறிமுகப்படுத்தி உள்ளது. … Read more

கல்வி உதவித்தொகை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு 60% பங்களிப்பை வழங்க வேண்டும்.கல்வி உதவித்தொகை திட்டத்தில் தமிழக அரசு ரூ. 2110 கோடி செலவாக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து 584 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு பிறகான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். மேலும், பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறைக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதை … Read more