அதிர்ச்சி…பிரதமரின் செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர்!

இஸ்ரேலின் என்எஸ்ஓ(NSO) என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக,இந்த ஸ்பைவேர்,மொபைல் போன்கள் அல்லது பிற சாதனங்களுக்குள் ஊடுருவி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரித்து உளவு பார்க்க முடியும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,ஸ்பெயினின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,பிரதமர் பெட்ரோ சான்செஸின் மொபைல் … Read more

தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து … Read more

அவர் ஏன் பேச மறுக்கிறார்? ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே! – ப.சிதம்பரம்

எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடிக்கு மட்டுமே உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருந்தது. இதுகுறித்து … Read more

#BREAKING: பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை – மத்திய அரசு விளக்கம்

பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கம். இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதனிடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த மழைக்கால  கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வரும் … Read more

#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!!

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட். பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை … Read more

#BREAKING: 10வது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கம்!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைப்பு. நாடாளுமன்ற மலைகளை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசாஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவை என இரு அவை தலைவர்களும் எச்சரித்தும், விவாதிக்க வேண்டும் என எதிரிக்கட்சிகள் முழக்கமிட்டு, அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் கூட்டத்தொடர் … Read more

அரசு சார்ந்த நபர்களுக்கு பெகாசஸ் அணுகலை தற்காலிகமாக நிறுத்திய என்எஸ்ஓ நிறுவனம்!!

பெகாசஸ்-க்கு எதிராக சுமத்தப்பட்ட பல்வேறு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் NSO அலுவலகங்களை தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன் எண்கள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்ட NSO குழுமம், பெகாசஸ் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள அரசு சார்ந்த நபர்களுக்கு அதன் ஸ்பைவேரை அணுகுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் … Read more

பெகாசஸ் விவகாரம்: என்.எஸ்.ஓ அலுவலகங்களை சோதனை செய்கிறது இஸ்ரேல் அரசு!

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களை சோதனையிட்டதாக NSO செய்தித் தொடர்பாளர் தகவல். பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இது பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் … Read more

#BREAKING: நாடாளுமன்றத்தில் கடும் அமளி… இரு அவைகளும் 8வது நாளாக முடக்கம் – சபாநாயகர் எச்சரிக்கை

மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் இரு அவைகளும் 8வது நாளாக இன்றும் முடங்கியது. நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் எதிரிக்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் இரு அவைகளையும் பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ஆவணங்களையும் எதிரிக்கட்சியினர் கிழித்து … Read more

பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? ஆம், இல்லை சொல்லுங்கள் – காங்கிரஸ் எம்பி, ராகுல்காந்தி

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் இந்தியாவின் ஜனநாயகத்தின் ஆன்மாவைத் தாக்கியுள்ளனர் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி குற்றசாட்டு. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், புதிய வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. இந்த நிலையில், இன்றுடெல்லியில் … Read more