இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! 

Congress MP Rahul Gandhi

Rahul Gandhi : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளது மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். Read More – இந்திய பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா.! எதிர்ப்பு காட்டும் அமெரிக்கா இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி , கே.சி.வேணுகோபால் … Read more

இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி.

Bharat jodo Nyay Yatra - Rahul gandhi speech

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். … Read more

நேதாஜியின் 127வது பிறந்தநாள் : நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை.!

Rahul gandhi - Netaji subhas chandra bose

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய ராணுவத்தை துவங்கி இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை வீரர்களை ஒருங்கிணைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பலவேறு அரசியல் பிரபலங்கள் மரியாதை செலுத்தியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் … Read more

கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள … Read more

மோடி, ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி என கத்தி ராகுல் காந்தியை நோக்கி முழக்கமிட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி வேகமாக கீழே இறங்கி சென்றார். பின்னர் மீண்டும் பேருந்துக்குள் வந்த அவர் அந்த … Read more

அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி

rahul gandhi

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் … Read more

சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் முடக்கம்! காரணம் என்ன?

National Herald case

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ் தான் நேஷனல் ஹெரால்டு. 1937-ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் நேரு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 1942-ஆம் நேஷனல் … Read more

15 லட்சம் தராத பிரதமர் மோடி, 14.5 லட்சம் கோடி கொடுத்துள்ளார்.! ராகுல்காந்தி குற்றசாட்டு.!

PM Modi - Rahul Gandhi

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் விவசாய கட்சிக்கு விட்டுக்கொடுத்து 199 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.  எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக 200 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக  போராடி வருகிறது. இன்று , ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சாதுல்ஷாஹர் நகரில் பிரச்சரத்தில் ஈடுப்பட்ட  காங்கிரஸ் … Read more

ராகுல் காந்திக்கு யாரோ OBC பற்றி எழுதி கொடுக்கின்றனர்.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Congress MP Rahul Gandhi - Union Minister Amit shah

இம்மாதம் நடைபெறும் 5 மாநில தேர்தல் என்பது அடுத்து வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதாலும், 5 மாநிலங்களிலும் தேசிய கட்சிகள் மாநில அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாலும் பாஜக , காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீடு பற்றிய பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறார். இதுகுறித்து இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

90 அதிகாரிகளை கொண்டு பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார்.! ராகுல்காந்தி குற்றசாட்டு.!

Congress MP Rahulgandhi

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் , அதன் பின்னர் 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆதரவில் இருந்து பின்வாங்கியதால் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர் அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று மத்திய … Read more