#JustNow: மேற்குவங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!

ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை. மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும், ஊழல் தொடர்பான வழக்கில் 26 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்தது. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின், நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி வீட்டில் … Read more

#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்!!

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட். பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் (இடை நீக்கம்) செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை … Read more

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்!

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாகவும் … Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி சாந்தனு வெளியேற மறுப்பு – அவை ஒத்திவைப்பு!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுப்பு. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உளவு பார்க்கும் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் போது, அதனை பறித்து கிழித்து எறிந்த விவகாரம் தொடர்பாக எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கையில் எம்பி சாந்தனு சென் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு … Read more

#BREAKING: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட்!!

மம்தாவின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நேற்று மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,, உளவு பார்க்கும் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வந்தார். அப்போது, அந்த அறிக்கையின் நகலை அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி, அதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சாந்தனு சென் கிழித்தாக கூறப்படுகிறது. அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி கிழித்த நகலை அவையின் துணை … Read more

கடந்த 6 மாதங்களாக மத்திய அரசு மேற்குவங்கத்தை கைப்பற்ற நினைத்ததை தவிர வேறு எதையும் செய்யவில்லை – மம்தா

மேற்குவங்கத்தை கைப்பற்ற விரும்பியதை தவிர வேறு எந்த வேலையும் மத்திய அரசு செய்யவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றி அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், முதல் சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா, மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில், மத்திய பாஜக அரசு தலைவர்கள் இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்குத் … Read more

மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கற்கள், கட்டைகளால் கிராம மக்கள் கடும் தாக்குதல்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் கற்கள், கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் அருகே பஞ்ச்குடி கிராமத்துக்கு ஆய்விற்காக சென்ற மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கிராமத்துக்கு வந்த அமைச்சரின் கார் மீது பொதுமக்கள் கற்கள் வீசியும், கட்டை கம்புகளால் தாக்கியும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பாதுகாப்பு வாகனங்களையும், பாதுகாப்பு … Read more

‘இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ – முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற இடங்களில் வன்முறை நடக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றசாட்டு. மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.  ஒரு மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளரான மம்தா பானர்ஜி, தான் பேட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து … Read more

தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்தால் நந்திகிராமில் வாக்கு எண்ணிக்கை மறுபரிசீலனை!- தேர்தல் ஆணையம்

தேர்தல் அதிகாரி தான் நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாமா வேண்டாமா என்று தீர்மானிக்க முடியும். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த கட்சி 47.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 77 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. … Read more

#Breaking: நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி!!

நந்திகிராம் தொகுதியில் மம்தா பாணர்ஜி வெற்றி பெரிதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவேந்த அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு. மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 78 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது. இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் … Read more