அதிர்ச்சி…பிரதமரின் செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர்!

இஸ்ரேலின் என்எஸ்ஓ(NSO) என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக,இந்த ஸ்பைவேர்,மொபைல் போன்கள் அல்லது பிற சாதனங்களுக்குள் ஊடுருவி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரித்து உளவு பார்க்க முடியும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,ஸ்பெயினின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,பிரதமர் பெட்ரோ சான்செஸின் மொபைல் … Read more

தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து … Read more

#BREAKING: பெகாசஸ் – குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு..!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு. பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் தரக் கோரி அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த … Read more

APPLE IPhone:பெகாசஸ் எதிரொலி…அவசர அப்டேட் கொடுத்த ஆப்பிள் நிறுவனம்..!

ஆப்பிள்(APPLE) நிறுவனம் தனது சாதனங்களில் ஸ்பைவேரைத் தடுக்கவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபோன், ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்சையும் பாதிக்கும் பூஜ்ஜிய நாள்( zero-day )பாதிப்புக்கான, பாதுகாப்பு புதுப்பிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறைபாட்டைக் கண்டறிந்த பிறகு பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது.சிட்டிசன் ஆய்வகம் தனது கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு செப்டம்பர் 7-ல் தெரிவித்ததாகக் … Read more

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க குழு -மத்திய அரசு உறுதி…!

பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து,பெகாசஸ் … Read more

நாடாளுமன்றத்தில் 16 ஆவது கூட்டத்தொடரில் விவசாயிகள் பிரச்சனை முடக்கம்..!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் தொடர்பாக  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று விவசாயிகள் பிரச்சனை முடங்கியுள்ளது.  கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.  பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் … Read more

பெகாசஸ் உளவு விவகாரம்- விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது..!

பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.   பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, பெகாசஸ்உளவு விவகாரத்தில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த … Read more

#BREAKING : பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் – உச்சநீதிமன்றம் கேள்வி..!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் அளிக்கப்படாமல் இருப்பது ஏன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் … Read more

#Breaking:மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு…!

எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை ஆலோசனை நடத்திய சூழலில்,பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வருகை புரிந்தனர். இந்நிலையில்,பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மையப் பகுதியில் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலங்களவையானது 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல ,மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் … Read more

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கவலைப்படாத ஒரே அரசு இந்திய அரசு தான்…! – ப.சிதம்பரம்

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து கவலைப்படாத ஒரே அரசு இந்தியாவில்தான் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 … Read more