#BREAKING: விவசாயிகள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவிப்பு..!

டெல்லி-ஹரியானாவில் உள்ள சிங்குவில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு விவசாயிகள் செய்துள்ளனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது புதிதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் … Read more

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா- குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்கடந்த திங்கள் கிழமை காலை தொடங்கியது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளே மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதா … Read more

3 வேளாண் சட்டங்கள்; போராட்டம் தொடரும்- விவசாயிகள் சங்கம்..!

போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படாது, நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக  அறிவிப்பை வெளியிட்டாலும், … Read more

கருப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள் – டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதற்கொண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். … Read more

விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை  நடத்தி வருகிறார்.  மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விதான் சபையில் விவசாய அமைப்புகளின் … Read more

பல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு , விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை  – பிரியங்கா காந்தி

உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே விவசாயிகள் 90 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராடி வரும் விவசாயிகளில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.போராடி வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் குறைக்கப்பட்டது, அவர்கள் தாக்கப்பட்டனர்.அவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் டெல்லியின் … Read more

விவசாய அமைப்பு தலைவர்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஆலோசனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர்  போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை விதான் சபையில் விவசாய அமைப்புகளின் … Read more

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை வலுப்படுத்துவதற்க்காக சாலை மறியல், போட்டோ போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் டிராக்டர் போராட்டம் போன்ற புதிய போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் … Read more

தீவிரிக்கும் விவசாயிகள் போராட்டம் – வரும் 18 ஆம் தேதி ரயில் மறியல் ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக வருகின்ற 18 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு. டெல்லியில் ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யோசித்து பல விதமான வழிகளில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து … Read more

போராட்டம் நடத்தும் விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுகிறார்கள் – அசாதுதீன் ஓவைசி!

டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி அவர்கள் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் புதிய வேளாண் சட்டம் மற்றும் தொடர்ச்சியான விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசை குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுவதாகவும், சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது. ஆனால் பிரதமர் மோடி சீனாவின் பெயரை உச்சரிக்கக் … Read more